சென்னை மண்ணில் மீண்டும் கால் பதித்த தோனி வைரலாகும் பயிற்சி வீடியோ video

ஐபிஎல் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களம் காண்கின்றன. தோனி தலைமையிலான சென்னை அணி மீண்டும் களமிறங்குவதால், சென்னை அணியின் ரசிகர்களும் தோனியின் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

இதுவரை ஐபிஎல் தொடரை வென்றிராத, பெங்களூரு, டெல்லி, பஞ்சாப் ஆகிய அணிகள், ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளன.

இந்த சீசனில் இரண்டு அணிகளுக்கு தமிழக வீரர்கள் கேப்டன்களாக செயல்பட உள்ளனர். பஞ்சாப் அணிக்கு அஸ்வினும் கொல்கத்தா அணிக்கு தினேஷ் கார்த்திக்கும் கேப்டன்களாக செயல்பட உள்ளனர். இதுவரை தோனியின் கேப்டன்சியின் கீழ் ஆடிவந்த அஸ்வின், இந்தமுறை தோனியை எதிர்த்து விளையாடுகிறார். அதுவும் கேப்டனாக.. அதனால் இந்த ஐபிஎல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், தோனி தலைமையிலான முன்னாள் சாம்பியன் சென்னை அணியும் மோதுகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடாமல் இருந்த சென்னை அணி, தோனி தலைமையில் மீண்டும் களம் காண்கிறது. தோனி, பிராவோ, ஹர்பஜன் உள்ளிட்ட சென்னை அணி வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்சென்னை வந்த அவர்களுக்கு விமான நிலையத்தில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

ஏன் திடீரென்று அஜித் அந்த கல்லூரிக்கு சென்றார் தெரியுமா வெளிவந்த ரகசியம்

இன்று அஜித்தின் சம்பளம் 25 கோடி, அன்று அவருக்கு கொடுத்தது 2500 ருபாய் சுரேஷ் மேனன்

ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியதால் ஆஸ்திரேலிய தலைவர் பதவி நீ௧்௧ம்