கிரிக்கெட் வீரரை ஆபாசமாக திட்டிய ரசிகரால் பரபரப்பு

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி, முதல் இன்னிங்ஸில் அந்த அணி, 311 ரன்கள் எடுத்தது.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி, 9 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்துள்ளது.

நேற்றைய ஆட்டத்தின் போது அவுஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னர், ரபாடா பந்தில் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசினார்.

ரபாடா பந்தில் ஆட்டமிழந்த வார்னர் பெவிலியன் திரும்பிக்கொண்டிருந்தபோது, ரசிகர் ஒருவர் வேகமாக கைதட்டியபடியே வந்து, வார்னரை திட்டினார்.

தனால் கடுப்பான வார்னர், ரசிகருடன் மோதலில் ஈடுபட்டார். மைதானத்தின் பவுண்டரிலைன் அருகே இருவரும் ஆபாசமாகத் திட்டிக்கொண்டனர். இதையடுத்து அங்கிருந்த பாதுகாவலர்கள் தலையிட்டு வார்னரை சமாதானப்படுத்தி பெவிலியனுக்கு அனுப்பி வைத்தனர்.

Comments

Popular posts from this blog

ஏன் திடீரென்று அஜித் அந்த கல்லூரிக்கு சென்றார் தெரியுமா வெளிவந்த ரகசியம்

இன்று அஜித்தின் சம்பளம் 25 கோடி, அன்று அவருக்கு கொடுத்தது 2500 ருபாய் சுரேஷ் மேனன்

ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியதால் ஆஸ்திரேலிய தலைவர் பதவி நீ௧்௧ம்